JKR. Blogger இயக்குவது.

திங்கள், 26 அக்டோபர், 2009

மருந்து - தடுப்பூசி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : அரச மருத்துவர்கள்


மருந்துப் பொருள் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருந்துப் பொருள் மற்றும் தடுப்பூசிகளில் காணப்பட்ட குறைபாடுகளினால் அண்மையில் சில உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களுக்கு மருத்துவர்களின் கவனயீனமே காரணம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சின் தூர நோக்கற்றச் செயல்களே இவ்வாறான உயிரிழப்புக்களுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அண்மைய நாட்களில் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் இரண்டு பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட காரணமாக அமைந்த ரூபெல்லா ஊசி மருந்து தயாரிக்கும், இந்தியாவின் ட்ரம் இன்சிடியூட் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தனது உயர் மட்ட அதிகாரிகளை, நிறுவனம் அமைந்துள்ள இந்தியாவின் பூனே நகருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010